
கேரள மாநிலத்தின் அதிமுக செயலாளர் ஜி. சோபகுமார் உடல் நலக்குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார். அந்த இரங்கல் பதிவில் கட்சியின் மீதும் கட்சி தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு திறம்பட கட்சி பணியாற்றி வந்த சோபகுமாரை இழந்து வாடும் தொண்டர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர வேண்டி கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய மறைவுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.