
தமிழகத்தில் உருவாகிவரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து பல தரப்புகளில் வாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளை மட்டுமே திறந்தவெளியில் எதிர்த்து வருகின்ற நிலையில், அதிமுகவிற்கு எதிரான கூர்மையான விமர்சனங்களை விஜய் முன்வைக்கவில்லை என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கவனத்தைக் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசிய திருமாவளவன், “விஜய் திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளை மட்டும் கொள்கை எதிரிகள் என வெளிப்படையாக விமர்சிக்கிறார். ஆனால், அதிமுகவின் மீது அதே அளவு விமர்சனமும், கொள்கை நிலைபாடும் அவர் எடுத்துரைக்கவில்லை. அதிமுகவைக் கூட அவர் தோழமை மனப்பான்மையுடன் பார்க்கிறாரா என்பதற்கே தற்போது சந்தேகம் எழுகிறது,” என்று கூரினார். மேலும், “இந்த சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டியவர் விஜய் தான்” என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள மத்திய அரசு பாதுகாப்பு குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்து, “தாமதமாக இருந்தாலும், விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமிக்கும் அளித்துள்ளது. இதை எங்கள் கட்சி வரவேற்கிறது,” என்றும் தெரிவித்தார்.