தமிழகத்தில் 6 மேல் சபை எம்பிக்களை தேர்வு செய்வதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது. அதாவது திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம் அப்துல்லா, மதிமுக கட்சியை சேர்ந்த வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன் மற்றும் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் எம்பி பதவி காலம் முடிவடைகிறது.

ஒரு எம்பி-ஐ தேர்வு செய்வதற்கு மொத்தம் 34 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் இதில் திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு 2 எம்பிகளும் கிடைப்பார்கள். இதில் அதிமுக ஏற்கனவே தேதிமுகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்குறுதி கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அப்படி எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது அதிமுகவிடம் மாநிலங்களவை எம்.பி சீட் கேட்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு இது பற்றி பாஜக தலைமை முடிவு செய்யும். மேலும் அவர்கள் அதிமுகவிற்கு முழு ஆதரவு கொடுக்க சொன்னால் நாங்கள் கொடுப்போம் என்று கூறினார். அதே நேரத்தில் அன்புமணி ராமதாாசுக்கும் ஒரு எம்.பி சீட் கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது முன்பு பாஜக கூட்டணியில் பாமக இருந்ததால் அவருக்கு எம்.பி சீட் கொடுக்க வாய்ப்புள்ளதா என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.