அதிமுக தலைமையின் நெருக்கடியின் காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு ஆதாரங்களுடன் கட்சி நிர்வாகி ஒருவரே குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார் இது குறித்து பேசுகையில், “இது போன்ற உறுப்பினர் கார்டு சேர்க்கையில் குளறுபடி நடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி 2026 தேர்தலில் மீண்டும் அம்மா ஆட்சி நல்லபடியாக கொண்டு வர வேண்டும் என்று பல திட்டங்களை வைத்துள்ளார்கள்.

இந்த நான்கு வருடமும் நல்லா விதமாக கட்சி நடந்தது. இப்பொழுது உறுப்பினர் கார்டு சேர்க்கையில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உறுப்பினர் கார்டு சேர்க்க சொல்கிறார். அதிமுகவில் சேர யாரும் வராததால் வாக்காளர் பட்டியலை வைத்து போலியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதேபோல் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது” என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.