
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதீனம், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கும், அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி அடைந்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளன. இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்கள் என்று மன வருத்தம் உள்ளது.
இந்த காரணத்தால் தான் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக தோல்வியை சந்தித்திருக்காது. பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கின்றன என்றும், அதிமுக அதனை செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் சாடியுள்ளார். மதுரை ஆதீனம் முன்பு அதிமுகவுடன் நெருக்கமாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது