மும்பையில் உள்ள புனே நெடுஞ்சாலையில் ஒரு லாரி ரசாயனம் ஏற்றிக்கொண்டு சென்றது. அதாவது ஸ்பிரிட் (எத்தனால்) என்ன ரசாயனத்தை ஒரு மதுபான நிறுவனத்திற்கு ஏற்றிக்கொண்டு அந்த லாரி சென்றது. இந்த லாரி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஷில்படா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ரசாயனம் கொட்டி தீப்பிடித்து எரிந்தது. இந்த ரசாயனம் கொட்டியதால் சாலையில் 25 அடி தூரத்திற்கு தீப்பிடித்து எரிந்தது. தகவல் தெரிவிக்கப்பட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிட்டத்தட்ட 3 மணி நேரமாக போராடிய அணைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.