ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடந்த கோர விபத்தில், பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 10 பயணிகள் உயிருடன் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் ஜக்தியாலில் இருந்து போதிலி நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, ராயவரம் அருகே சரளைக்கற்கள் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் வேகம் காரணமாகப் பேருந்து மற்றும் லாரி ஆகிய இரண்டு வாகனங்களும் அடுத்த சில நிமிடங்களிலேயே தீப்பற்றி எரிந்தன. இந்தத் தீயில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சுமார் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மார்க்காபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“>

 

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.