
தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவினர் பரிசுப் பொருள் விநியோகிப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சோதனை செய்ய வந்த அதிகாரியை எம்.ஆர் விஜயபாஸ்கர் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.