அதானிக்கு வழங்க இருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியிருந்தேன். இப்போது நடந்திருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே செயல்படுத்த வேண்டும். மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
