மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், உறவுகளின் புனிதத்தைக் கேள்விகுறியாக்கும் ஒரு பயங்கரமான படுகொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சத்தாரி பகுதியில், தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த மனைவியை கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவனும், அவனது காதலியும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய ஷீலா பிபி ஆவார். இவருக்கும் மொஜம்மல் என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மொஜம்மல் வெளிமாநிலங்களில் சென்று வேலை செய்யும் ஒரு புலம்பெயர் தொழிலாளி ஆவார். இவர்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகளும் உள்ளனர்.
விசாரணையில், கடந்த சில மாதங்களாக மொஜம்மலுக்கும் அவரது உறவினர் முறைப் பெண்ணான அண்ணி முறையில் உலா ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவறறிந்த ஷீலா பிபி தனது கணவனின் சில்மிசக் காதலைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் அந்தத் தம்பதியிடையே தினமும் தகராறும் குடும்பக் கலவரமும் வெடித்துள்ளது. சம்பவத்தன்றும் இதே விவகாரம் தொடர்பாக அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற மொஜம்மல், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கண்மூடித்தனமாக ஷீலாவின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார்.
தன் மனைவியைக் கொன்றபிறகு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் ஷீலாவின் இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலத்தை வீட்டின் படுக்கையறை கட்டிலுக்கு அடியில் தள்ளி மறைத்து வைத்துள்ளான். ஆனால், வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு அவர்களின் நடவடிக்கைகளில் திடீர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலுக்கு அடியில் ஷீலாவின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடப்பது கண்டு அதிர்ந்து போயுள்ளனர். உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் கொலையில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான கணவன் மொஜம்மல் மற்றும் அவனது கள்ளக்காதலி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
