அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது. ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.