சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். மேலும் 48 நாட்கள் போராட்டம் இருந்து முருகனிடம் முறையிட போவதாக கூறியிருந்தார். திமுக கட்சி ஆட்சியில் இருந்து விலகும் வரை செருப்பு அணியப் போவதில்லை எனவும் அறிவித்தார்.

அவரது செயலை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. எனக்கும் கோபம் இருக்கிறது. அதற்காக தன்னை தானே சாட்டையில் அடித்துக் கொள்ள கூடாது என கூறியுள்ளார்.