மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல். முருகன், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ், நெல்லை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரது வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன