கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள ஆரம்ப வகுப்புகளில் 25 சதவீதம் எண்ணிக்கையிலான இடங்களை ஆர் டி இ பிரிவின் கீழ் ஒதுக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய முடியும். ஒரு பள்ளியின் ஆரம்ப நிலை வகுப்பு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் இந்த திட்டத்தில் இணைந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான RTE மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.