சென்னையில் நடிகரும் பாஜக முன்னாள் பிரமுகர்மான எஸ்.வி சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் பின்பற்றப்படும் இதுதான் சரி. மத்திய மந்திரி அமித்ஷா நாங்கள் ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்று கூறி ஹிந்தியில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகச் சரியான முறையில் மும்மொழி கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறார்.

அவருக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். அண்ணாமலை இருக்கும் வரையில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் திமுகவின் வெற்றி என்பது உறுதி. திமுக தனியாக நின்று வாக்கு சேகரிக்க வேண்டாம்.அனைத்து பகுதிகளுக்கும் அண்ணாமலையை அனுப்பி வைத்து பேச வைத்தாலே போதும் திமுகவுக்கு வாக்குகள் தானாக கிடைத்து விடும். மேலும் கண்டிப்பாக திமுக வெற்றியும் பெற்றுவிடும் என்று கூறினார்.