
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் என்ற பெயர் குறிப்பிடப்படாததும் தமிழகத்திற்கு தனியாக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி போட்டி போடுகிறார் என்று எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.. மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து கூறிய நிலையில், சு. வெங்கடேசன் தனது X தளத்தில், தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை முன்னோக்கு நிதிநிலை அறிக்கை என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். ஜூலை 31ஆம் தேதி பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல என்று பதிவிட்டுள்ளார்.