
மக்களவை தேர்தல் முடிவுகள் தமிழக பாஜகவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்றாலும் கணிசமான வாக்குகளை அக்கட்சி கைப்பற்றி இருக்கிறது. தனி கட்சியாக பாஜகவின் வாக்கு வாங்கியானது 11.24 சதவீதம் அதிகரித்துள்ளது. தோல்விக்கு மத்தியில் பாஜக தலைமை மாநில நிர்வாகிகள் மீது பெரிய அதிருப்தி தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற செய்திகள் அதிகரித்துள்ளது. ராஜ்யசபா எம்பி ஆக்கி இவருக்கு இந்த பதவியை கட்சி தலைமை அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே எல். முருகனுக்கு மத்திய அமைச்சர் அமைச்சரவையில் இடம் அளித்திருந்தது பாஜக. ஆனால் 2026 ஆம் வருடம் தேர்தலில் குறி வைக்கும் தமிழக பாஜகவின் இலக்கில் இருந்து தற்போது அண்ணாமலையை திசை திருப்பவும் பாஜக தலைமை விரும்பாது என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை இன்னும் ஓரிரு நாட்களில் அமைக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால் அப்போது இதற்கான பதில்கள் கிடைத்துவிடும். நேற்று முன்தினம் முதலே தமிழக பாஜக தலைமை பதவி மாற்றப்படும் என்று தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த செய்திகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.