சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இன்று பாஜக மற்றும் அதிமுக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அதோடு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருக்கப் போவதாகவும் பிப்ரவரி மாதம் அறுபடை வீடுகளுக்கு செல்ல போவதாகவும் கூறியுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு அவர் சாட்டையால் அடிக்கப் போகிறேன் என்று கூறிய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது காலையில் இருந்த செருப்பை திடீர் என கழட்டி காண்பித்து முதல்வர் ஸ்டாலினை இனி ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் செருப்பு போட மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார். இது தொடர்பாக தற்போது தொல் திருமாவளவன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அண்ணாமலை அரசியல் ஆதாயம் வேண்டுகிறார். அவர் லண்டன் சென்று வந்த பிறகு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காந்தியடிகள் போன்று அகிம்சை வழியை கையில் எடுக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் காந்தியடிகள் கூட இவ்வாறு செய்ய மாட்டார் என்றார் என்று கூறினார்.