தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையின் சமந்தா. இவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், திறமையாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் சமந்தாவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் ஒருவரை போல ஏழு பேர் இருப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த நிலையில் சமந்தாவை போல இருக்கும் பெண் ஒருவர், சமந்தா  தன்னுடைய திருமணத்தில் எப்படி இருந்தாரோ அதே போன்ற புடவை, மேக்கப் மற்றும் நகைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.