ஐபிஎல் 2025 தொடரில், இந்திய அணி வீரரான ரிஷப்பண்ட்  இந்த சீசனில் சொதப்பி வருகிறார். இந்த சீசனுக்கு மிக உயர்ந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தாலும், அவர் இதுவரை வெறும் 128 ரன்களையே மட்டுமே குவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே ரன்கள் எடுக்க முயன்றும்  அவரால் முடியவில்லை.

இந்நிலையில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான 61வது ஆட்டத்தில், ரிஷப்பண்ட் தனது இன்னிங்ஸை ஒரு அழகான புல் ஷாட்டில் பவுண்டரியுடன் தொடங்கினார். ஆனால் அடுத்த பந்திலேயே இஷான் மாலிங்கா வீசிய ஸ்லோ பந்தை சரியாக அடிக்க முடியாமல், பந்து நேராக கையிலே பிடிபடும்படி லாப் செய்து விட்டார். அதனை மாலிங்கா  பிடித்து விட்டார். இதனையடுத்து பந்த் பவிலியனை நோக்கி திரும்பினார்.

 

இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, லக்னோவிலுள்ள எகானா கிரிக்கெட் மைதானத்தில் இருந்த தனது அமர்விடத்தில் இருந்து எழுந்து, கோபத்துடன் உள்ளே சென்ற காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப்பின் தொடர்ச்சியான தோல்விகள் அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர்.