தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான சாணி காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மாமன்னன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு தெலுங்கில் தசரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளுவார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை நடிகை கீர்த்தி பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ஏராளமான லைக்ஸ் கள் குவிந்து வருகிறது.