
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட்டிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா நேற்று முன்தினம் நடைபெற்ற எல்லே சஸ்டேய்னபிலிட்டி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது நடிகை சமந்தா ஒரு கருப்பு நிற உடையை அணிந்திருந்தார். இந்த ஆடை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதாவது நடிகை சமந்தாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது நடிகை சமந்தா வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தார். இந்த வெள்ளை நிற கவுனை தான் தற்போது கருப்பு நிற ஆடையாக மாற்றி வடிவமைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை ஆடை வடிவமைப்பாளர் கிரேஷா பஜாஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் எப்போதும் புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும். எப்போதும் நடப்பதற்கு புதிய பாதைகள் உள்ளது. சமந்தாவுடன் இணைந்து ஒரு புதிய பாதையை உருவாக்கவும் ஒரு புதிய கதையை சொல்லவும் நாங்கள் விரும்பினோம். அழகு எப்பொழுதும் நிரந்தரம். அது ஒவ்வொரு நாளும் புதிய வடிவத்தை எடுக்கிறது என்ற பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை சமந்தா தன்னுடைய கல்யாண கவுனை கருப்பு நிற உடையாக மாற்றியது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram