
அமெரிக்காவின் தென் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சவுத் பிளாண்டேஷன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா, ஒரு மாணவனின் அதிரடி ஸ்டண்ட் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் தனது சான்றிதழைப் பெற்றவுடன் ஒரு மாணவன் மேடையில் ‘பேக் ஃபிளிப்’ (backflip) செய்ய முயன்றார். அதாவது குட்டிக்கரணை அடிக்க என்றார். ஆனால், அவருடைய கால் பின்னால் நின்ற மாணவியின் தலைக்குத் தவறுதலாக தாக்கியதால் அந்த மாணவி கீழே விழுந்தார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
TikTok பக்கத்தில் பதிவிட்ட ஒருவர் கூறியதாவது, “பேக் ஃபிளிப் செய்யப்போவதாக அந்த மாணவன் ஏற்கனவே பின்நின்ற மாணவியிடம் எச்சரித்திருந்தார். ஆனால் உற்சாகம் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு இருவரும் விழா முடியும் வரை அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், கடந்த 2018-ல் ஃப்ளோரிடாவின் பீச்சில் ஒரு மாணவர் ஃபிளிப் செய்து ஒருவர் மீது விழுந்ததை நினைவுபடுத்துகிறது. இப்போது நடைபெற்ற சம்பவமும், விழாக்களில் உஷாராக செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. மேலும் சிறிய தவறுகள் கூட, வாழ்நாள் நிகழ்வுகளை மாற்றக்கூடியவையாக மாறலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.
View this post on Instagram