
இந்திய பிரீமியர் லீக் 2025 தொடர் இன்றைய 18-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியும் நேற்று மோதியது. இந்த போட்டி ஹைதராபாத் நகரின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்க்கெட்டுகளும், சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணைந்தனர்.
இதில் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கில் 61 ரன்கள் கடந்த நிலையில், ஷெர்பேன் ரூத்ர்போடு 35 ரன்கள் வரை எடுத்திருந்தார். இறுதியில் குஜராத் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. மேலும் இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
Ruk jao bhai kya kar rahe ho
Normal cricket khel lo ab 🤣🤣Kavya maran’s reactions 🤌🏽🤣 pic.twitter.com/O39QTMNgPc
— ••TAUKIR•• (@iitaukir) April 6, 2025
இந்த நிலையில், SRH உரிமையாளர் கவ்யா மாறன் பங்கேற்றிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகின்றன. தொடக்க பேட்ஸ்மானான டிராவிஸ் ஹெட்டைமுதல் ஓவரிலேயே சிராஜ் வீழ்த்தியதும், ஸ்டேடியத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து கவ்யா மாறன் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.
தொடர்ந்து SRH விக்கெட்டுகள் ஒன்றாக ஒன்று விழுந்ததும், அவரது முகபாவனைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. சில நெட்டிசன்கள் “பழக்கப்படி SRH இப்போது 300 ரன்களுக்கு விளையாட வேண்டாம்” என்று கிண்டலான கருத்துகள் பகிர்ந்தனர்.
Kavya Maran to her Team: kitna smjaoo inn logo ko 😅#SRHvGT pic.twitter.com/1oSpQQYxna
— TheOpinionHub (@TheOpinionHub) April 6, 2025
மேலும் ஹைதராபாத் அணி தடுமாறிய நிலையில் காவியா மாறன் கோபத்தோடும் சோகத்தோடும் கொடுத்த முக பாவனைகள் சமூக வலைதளத்தில் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. எப்போதுமே ஹைதராபாத் போட்டி நடைபெறும் போது வீரர்களை விட காவியா மாறன் தான் டிரெண்டாவார். அவருக்காகவாது ஹைதராபாத் அணி ஜெயிக்க வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். மேலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு ஹைதராபாத் அணி காவியா மாறனுக்காகவாவது ஜெயிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.