பொதுவாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு அதை அதிக வருமானமாக மாற்றுவதற்காக பணத்தை பல்வேறு திட்டங்களில் சேமித்து வருகிறார்கள். இதற்கு லாபகரமான வட்டியும் கிடைக்கிறது. ஆரம்பத்தில் உங்களுடைய முதலீட்டில் வளர்ச்சி அளவு சிறியதாக இருக்கும். ஆனால் வருடங்கள் ஆன பிறகு அதன் மதிப்பானது அதிகரித்துக் கொண்டே தான் செல்லும்.  இன்றைய காலகட்டத்தில் வங்கி என்பது மிக முக்கியமான ஒன்று.  பணம் டெபாசிட் செய்யவும், தேவைப்படும்போது பணத்தை எடுக்கவும் பயன்படுகிறது. சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவையும் வங்கிகளில் செய்யப்படுகிறது. இதனையடுத்து சில வங்கிகள் வழங்கும் சிறப்பு டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐடிபிஐ வங்கி: உத்சவ் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு சிறப்பு விகிதத்தை வழங்கப்படுகிறது. 300 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் டெபாசிட்டுக்கு 7.05% வட்டி, மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி. 375 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் டெபாசிட்டுகளுக்கு 7.1% வட்டி , மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி

இந்தியன் வங்கி: 300 மற்றும் 400 நாட்களில் முதிர்வடையும் Ind Supreme டெபாசிட் திட்டத்தில் பொது மக்களுக்கு 7.05% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி . 400 நாட்களில் முதிர்ச்சியடையும் திட்டத்தில் பொது மக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி.