
இன்றைய காலகட்டத்தில் மது இல்லாமல் திருமண விழாவா என்ற அளவிற்கு திருமண நிகழ்ச்சிகளில் மது குடிக்கும் சம்பவங்களும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான செய்திகளும் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் காரில் சிலர் பார்ர் அமைத்து திருமண நிகழ்ச்சியின் போது மது குடித்துள்ளனர்.
அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் சம்பவ நாளில் ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சிலர் வெளியே காரில் பார் அமைத்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.