மத்திய அரசு சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024) தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ₹3,641 கோடி செலவிட்டது RTI மூலம் தெரிய வந்துள்ளது. அரசின் விளம்பரச் செலவு தொடர்பாக RTI கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, எஸ்எம்எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ₹667 கோடி செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது. இதில், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர், டிஜிட்டல் போஸ்டர் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்ட தொகைப் பற்றிய தகவல் இல்லை.