
நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையாக மாறியது. அதாவது தற்போது அம்பேத்கர் பற்றி பேசுவது பேஷன் ஆகிவிட்டது எனவும், அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்றும் கூறினார். அவருடைய இந்த பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் அம்பேத்கரின் படிப்பு சான்றிதழ் தற்போது இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 1902 ஆம் ஆண்டு அம்பேத்கர் தொடக்கப்பள்ளியில் படித்தது முதல் கடந்த 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றது முதல் அனைத்து படிப்புகளும் கொண்ட சர்டிபிகேட் வைரல் ஆகிறது. மேலும் இதனை பார்த்த பலரும் அம்பேத்கரின் கல்வி பட்டியல் மிகவும் வியத்தகது மற்றும் அசாத்தியமானது என்று கூறி வருகிறார்கள்.
Power of Education
#BabaSaheb pic.twitter.com/RFJlF5pZux
— Dhruv Rathee (@dhruv_rathee) December 19, 2024