சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த பல வருடங்களாக தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதை அடுத்து, புதிய பயிற்சியாளரை நியமிக்க அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது சிஎஸ்கே அணி இளம் வீரர்களைக் கொண்ட புதிய டீமை உருவாக்கி வருவதால், அதற்கு ஏற்றவாறு டெல்லி கேபிடல்ஸ் அணியில் கடந்த இரண்டு சீசன்களாக பயிற்சியாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானியை தூக்க சென்னை டீம் ஸ்கெட்ச் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

​டெல்லி அணியில் இளம் வீரர்களை வழிநடத்தி, அவர்களை பட்டை தீட்டிய அனுபவம் ஹேமங் பதானிக்கு அதிகமாகவே உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை அணியின் சூழலும், சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையும் அவருக்கு அக்குவேர் ஆணிவேராகத் தெரியும் என்பதால், சிஎஸ்கே-வின் புதிய ‘பாஸ்’ ஆக பதானி தேர்வாகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.