
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவருடைய சகோதரிகளும் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள். அதன் பிறகு நடிகர் அருண் விஜய் தமிழில் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் ஹீரோவாக நடித்து வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தல அஜித்தின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் விக்டர் என்ற நெகட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் அருண் விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இந்நிலையில் நடிகர் அருண் விஜயின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் அருண் விஜயின் மொத்த சொத்து மதிப்பு 80 கோடி என்று கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இவருக்கு மொத்த ஆண்டு வருமானம் 11 கோடியாகும். நடிகர் அருண் விஜய்க்கு சென்னையில் பிரமாண்டமான வீடு இருக்கிறது. மேலும் இவரிடம் 1.65 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ செவன் சீரிஸ் கார், 61 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார், 60 லட்சம் மதிப்புள்ள Jagar JLR, 18 லட்சம் மதிப்புள்ள Isuzu pickup truck, 16 லட்சம் மதிப்புள்ள Toyota Innova Hycross போன்ற கார்கள் இருக்கிறது.