தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏகே62 திரைப்படம் 190 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஏகே 62 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.