பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பதான் திரைப்படம் 900 கோடி வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியின் போது நடிகர் ஷாருக்கான் கைகளில் கட்டி இருந்த நீல நிற வாட்சின் விலை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது நடிகர் ஷாருக்கான் ஆடிமார்ஸ் பிகுயெட் ராயல் ஓக் பரபெச்சுவல் காலெண்டர் மாடல் வாட்ச்சை கட்டி இருந்தார்.

இந்த வாட்சின் விலை சுமார் 4 கோடியே 98 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பணக்கார நடிகர்களில் நடிகர் ஷாருக்கான் ஒருவர். அவருக்கு நடிப்பு, தயாரிப்பு நிறுவனம், விளம்பர படங்கள், கொல்கத்தா ஐபிஎல் அணி போன்றவைகளின் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது. நடிகர் ஷாருக்கான் மும்பையில் வசிக்கும் வீட்டின் விலை 200 கோடி என்று கூறப்படுகிறது. அதோடு நடிகர் ஷாருக்கான் பல ஆடம்பர கார்களை வைத்துள்ளதோடு, டெல்லியிலும் சொந்தமாக ஒரு வீடு வைத்துள்ளார். மேலும் நடிகர் ஷாருகானின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 6000 கோடி என்று கூறப்படுகிறது.