
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் வைரமுத்து. இவருடைய தாயார் அங்கம்மாள். இவர் இன்று மாலை மரணம் அடைந்ததாக வைரமுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு நாளை அவருக்கு இறுதி சடங்குகள் சொந்த ஊரான தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.