இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ரோஹித் சர்மா சொதப்பியது தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் தவஸ்கர் ரோஹித் சர்மாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதை அடுத்து ராஞ்சி கோப்பை போட்டியில் மும்பை சார்பாக ஜம்மு காஷ்மீருடன் மோதிய போதும் ரோஹித் சர்மா குறைந்த ரன்கள் எடுத்தார். இதனால் ரோஹித் சர்மா ராஞ்சி கோப்பை போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்து இருந்தார்.

இவ்வாறு அடுக்கடுக்கான விமர்சனங்களால் கோபமடைந்த ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மீது புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தேவையின்றி தன்னை விமர்சிப்பதும் ராஞ்சி கோப்பை போட்டியில் தனது ஈடுபாட்டை குறை சொல்வதும் தனக்கு அழுத்தத்தை கொடுப்பதாக கிரிக்கெட் வாரியத்திடம் ரோஹித் சர்மா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.