திமுக கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்து சர்ச்சையில் சிக்குவார். அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை அடி முட்டாள் என்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். அதாவது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் அவருடைய போட்டோவிற்கு மரியாதை செலுத்திய நிலையில் அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை விமர்சித்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நேத்து பெஞ்ச மழையில் முளைத்தது. அது சொல்லுது அங்க இங்கன்னு போய் நின்னு போட்டோ எடுக்க கூடாதாம். அது சீன் காட்றதாம். சரி இருக்கட்டும் ஐயா முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் வந்தது அல்லவா.

நீ போட்டோ எடுக்காமல் வேறு என்ன எடுத்து பத்திரிக்கைக்கு கொடுத்த. எங்களை போட்டோ சூட் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு இப்போது நீங்கள் எடுப்பது என்ன.? அடி முட்டாளே.! நாங்களாவது அந்த இடத்திற்கு நேரில் சென்று போட்டோ எடுக்கிறோம். நீ வீட்டுக்குள் நின்று போட்டோ எடுத்து அனுப்புகிறாய் என்று விமர்சித்தார். மேலும் முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் போட்டோ சூட் நடத்தும் விளம்பர மாடல் ஆட்சி என்று திமுகவை விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விஜய்யை இப்படி விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.