திருமணங்களில் DJ இசையும், உற்சாகமான நடனங்களும் இல்லாமல் அந்த நிகழ்ச்சி முழுமையடையாது. அண்மையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், DJ பாடலுக்கு நேரத்துக்கேற்ப மணமகன் ஆடும் விதம் அனைவரையும் அசரவைக்கும் வகையில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Bridal lehenga (@bridal_lehenga_designn)

மணமகனின் இந்த அசாத்தியமான நடனம், திருமண விழாவை திருவிழாவாக்கியது. பார்வையாளர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவர் முழு உற்சாகத்துடன் நடனமாடுகிறார். சில விநாடிகளில் அவர் முகத்தில் ‘புதையல் கண்டுபிடித்தது’ போல மகிழ்ச்சி பொங்க, சில சமயங்களில் அவரது அதிரடியான நடன அசைவுகள் அனைவரையும் சிரிக்க வைத்தன.

இந்த வீடியோவை திருமண விழாவிற்கு வந்த ஒருவர் கேமராவில் பதிவுசெய்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் “பாம்பின் ஆவி உடம்புக்குள்ள நுழைந்த மாதிரி இருக்கு!” என கருத்துகள் தெரிவிக்க, சிலர் இந்த மணமகனின் நடன வீடியோவை பார்த்து சிரிப்பில் உருண்டு விழுகின்றனர்.