
பொதுப் போக்குவரத்து துறையில் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரயில்கள் தான். பெரும்பாலும் பொதுமக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். பயண நேரம் செலவு இரண்டுமே குறைவாக இருப்பதால் மக்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய ரயில்வே புதிய அம்சத்தை பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. டிராபிக் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்யலாம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலமாக சவுகரியமாக பயணம் செய்ய முடியும். இந்த நிலையில் இந்தியன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஆன்லைனில் மக்கள் டிக்கெட் புக் செய்யும் போது பணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது “புக் நவ் பே லேட்டர்” என்ற ஆப்ஷனை இந்திய ரயில்வே அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்த பின்பு பணத்தை செலுத்தலாம். இது ரயிலில் பயணிக்கும் பலருக்கு உதவியாகவே இருக்கும். டிக்கெட் முன்பதி செய்வதற்கு இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று புக் நவ் பே லேட்டர்” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். பின்பு புதிய பக்கத்தில் பயணிகளின் விவரங்கள் உள்ளிட்ட தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்.
அதன் பிறகு டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். அதேபோல டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு அதன் பிறகு கட்டணத்தை செலுத்த விரும்புபவர்கள் www.epaylater.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதனை தேர்ந்தெடுத்து தகவல்கள் நிரப்பி முன்கூட்டியே பணம் செலுத்தாமல் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 14 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.