
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகலகுண்டே பகுதியில் உள்ள ஷோரூமில் எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த எலக்ட்ரிக் பைக் அவ்வபோது பழுதாகி சாலையில் திடீரென நின்று விடும். இதனால் சரத் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். அவர் அந்த பைக்கை அடிக்கடி பழுது பார்த்துள்ளார். இருப்பினும் அது அடிக்கடி பழுதானது. இதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்த சரத் பைக் வாங்கிய ஷோவ்ரூம்கு சென்றார்.
பின் அந்த ஷோரூம் முன்பாக பைக்கை நிறுத்திவிட்டு திடீரென அதனை தீ வைத்து எரித்து விட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து விட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.