சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்ற நிலையில் திடீரென வாயைப் பொத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். உடனடியாக அந்தப் பெண் வாலிபரின் கையை கடித்து வைத்துவிட்டு தப்பிஓடிவிட்டார். அந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையில் எப்படியோ தப்பித்த அந்த பெண் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லோகேஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பெருங்குடியில் உள்ள ஒரு பகுதியில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் வேலை செய்யும் ஹோட்டலுக்கு அந்த பெண் அடிக்கடி சாப்பிட்டு வருவார். நான் அவரின் அழகில் மயங்கி விட்டதால் அவரை அடைய வேண்டும் என்று நினைத்தேன்.

இதற்காக சம்பவ நாளில் விடுமுறை எடுத்து மது குடித்துவிட்டு அந்த பெண் வேலையை முடிந்து நடந்து செல்லும் பாதையில் பின்தொடர்ந்து பின்னர் வாயை பொத்தி ஆளில்லா இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்தேன். ஆனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்துவிட்டனர். இதனால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயிலில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.