ஹைதராபாத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்காக பெண்ணின் கைவிரலை கடித்து துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 26 வயதுடைய வாலிபர் ஒருவர் முன்பு ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தார்.

தற்போது அங்கிருந்து காலி செய்துவிட்டு வேறு வீட்டில் வசித்து வருகிறார். முன்பு தான் வாடகைக்கு இருந்த வீட்டு ஓனரான பெண்ணிடம் வாலிபர் மாத சீட்டு கட்டி வந்தார். அந்த பணத்தை கேட்ட போது அந்த பெண் வாடகை நிலுவை என கூறி 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பிடித்தம் செய்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த வாலிபர் அந்த பெண்ணின் கைவிரலை கடித்து துண்டாக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.