பொதுவாகவே திருமண விழாக்கள்,  குடும்ப விழா விசேஷங்களில் எல்லாம் சிக்கன் பிரியாணி விருந்து வைப்பது முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. அதிலும் லெக் பீஸ் எனப்படும் பெரிய இறைச்சி துண்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது இல்லாத பிரியாணி என்பது குஸ்காவாக மாறிவிடுகிறது. அந்த வகையில் ஒரு திருமண விழா நிகழ்ச்சியின் போது லெக் பீஸ் இல்லாமல் பிரியாணி வழங்கப்பட்டதால் பெரிய கலவரமே உண்டாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு திருமண விழாவில் மணமகன் வீட்டார் வழங்கப்பட்ட விருந்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது .அதை சாப்பிட்ட சிலருக்கு லெக் பீஸ் துண்டு இல்லையாம். இதனால் இளைஞர்கள் அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கி தொடங்கிய வாக்குவாதம் கைகளைப்பாக வளர்ந்து ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையே தங்களுடைய தரப்புக்காக சண்டையிட்டுள்ளார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/i/status/1805181727410639340