உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் திருடர்கள் வீதியில் இருந்த இரும்பு வடிகால் மூடியை இரவு நேரத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி நள்ளிரவில், லால் குவான் பகுதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
வீடியோவில், இரண்டு பேர் அந்த இரும்பு மூடியை தூக்குவதையும், மற்றொரு நபர் இ-ரிக்ஷாவில் வந்து உதவுவதையும் தெளிவாக பார்க்க முடிகிறது. மூவரும் ஒருங்கிணைந்து இரும்பு மூடியை ரிக்ஷாவில் ஏற்றி, இடத்தை விட்டு தப்பிச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
యూపీలో డ్రైనేజ్ కాలువ మీద అమర్చిన ఐరన్ కవర్ను ఎత్తుకెళ్లిన దొంగలు
ఘజియాబాద్లో ఘటన
సీసీటీవీ ఫుటేజ్ ఆధారంగా దొంగల కోసం గాలిస్తున్న పోలీసులు pic.twitter.com/b2pmdnnSKp
— Telugu Scribe (@TeluguScribe) August 3, 2025
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற செயல்கள் கடுமையாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. முழு திருட்டும் கேமராவில் பதிவாகியிருப்பதால், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. .
