
நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள அவர், ‘அய்யா பெரியோர்களே திடிர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு செய்திகள அனுப்பிச்சாங்க.
அடப்பாவிகளா, நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக, உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சரவனா’ என கூறியுள்ளார்.