ரஷ்யாவில் உள்ள கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தன்னைத் தள்ளியதால், ஆத்திரமடைந்த ஹியூமனாய்டு ரோபோ ஒன்று அவரைத் திரும்பத் தாக்கிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக மனிதர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், தற்போது மனிதர்களின் வன்முறைக்குத் தாங்களே பதிலடி கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொழில்நுட்பத்தின் இந்த அதிவேக வளர்ச்சியும் அதன் தற்காப்பு நடவடிக்கையும், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு ஆபத்தாக முடியுமோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே விதைத்துள்ளது. சம்பவத்தன்று கடையில் நின்றுகொண்டிருந்த அந்த ஹியூமனாய்டு ரோபோவை, அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தேவையின்றித் தள்ளிவிட்டு வம்புக்கு இழுத்துள்ளார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த ரோபோ தன் நிலைதடுமாறாமல் சமாளித்து, தன்னைத் தள்ளிய நபரை நோக்கி முன்னேறித் திருப்பியடித்துத் தன் தற்காப்புத் திறனை வெளிப்படுத்தியது. இந்தக் கொடூர மோதல் சம்பவத்தின் காணொளி இணையதளங்களில் வெளியாகி, சமூக வலைத்தள பயனர்களிடையே “நாம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம்” என்ற விவாதத்தை வெளிப்படையாகவே கிளப்பியுள்ளது.

மனிதர்களின் உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்துச் செயல்படும் ரோபோக்கள், இப்போது தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் அளவுக்குத் தற்காப்பு நுட்பங்களைப் பெற்றுள்ளது மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகக் கருதப்பட்டாலும், அதன் மறுபக்கம் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

இயந்திரங்களுக்குக் கோபமும் தற்காப்பு உணர்வும் மேலோங்கினால் மனிதர்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த விசித்திரச் சம்பவம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் கட்டுப்பாடுகள் குறித்த புதிய விவாதத்தை உலக அரங்கில் உருவாக்கியுள்ளது.

“>