நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் 5-வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மொத்தம் 86 நிமிடங்கள் பட்ஜெட் உரையை இடைவெளி இன்றி நிர்மலா சீதாராமன் வாசித்தார். இதுதான் பட்ஜெட் வரலாற்றில் குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்ட உரையாகும். கடந்த ஆண்டு 92 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமராமன், இந்த ஆண்டு அந்த சாதனையை முறியடித்துள்ளார்.