தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

அவ்வப்போது ‘லியோ’ படம் பற்றி ஏதேனும் ஒரு அப்டேட் எப்படியாவது வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இப்படத்தில் அர்ஜுன்,  சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் இடம்பெறும் பாடலில் அனிருத் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.