
உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாகவும் தமிழ் இருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழ் பாடல்களை பாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அந்த இளம்பெண் வாத்தி படத்தில் இடம்பெற்ற அடியாத்தி பாடலை அழகாக பாடியுள்ளார்.
மேலும் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்திலிருந்து அனல் மேலே பனித்துளி பாடலையும் அச்சு பிசக்காமல் தமிழில் அப்படியே பாடி வியக்க வைத்துள்ளார். இந்த வீடியோவை ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு நமது தாய் மொழியைப் பிறர் உச்சரிக்கை கேட்கும் போது பிறக்கும் உவகை, சொல்லால் விளக்க முடியாத உணர்வு. பிற மொழியை தாய்மொழியாக கொண்டோரையும் நம் தமிழ் மொழி உச்சரிக்க தூண்டும் திரையிசைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
நமது தாய் மொழியை
பிறர் உச்சரிக்கக் கேட்கும்
போது பிறக்கும் உவகை, சொல்லால் விளக்க முடியாத உணர்வு. பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி. pic.twitter.com/HX6DQHSIcb— shanmugamchinnaraj (@shanmugamchin10) November 4, 2024