கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி தருவதாக பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் மூன்று லட்சம் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை கண்டறிவதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் வீடு இல்லாமல் இருக்கும் பொது மக்களுக்கு அரசு சார்பாக இலவச வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.