பிரபல சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பலரும் ரீல்ஸ் போட்டு வருகிறார்கள். இது பலருக்கும் ஒரு பொழுதுபோக்கு தளமாக இருக்கிறது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ரீல்ஸ்களில் பல ஆடியோ டிராக்குகளை சேர்க்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது பயனர்கள் தங்கள் ரீல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட டிராக்கைச் சேர்ப்பதற்கு அனுமதிக்கிறது. இந்த புதிய மல்டி ட்ராக் ரீல்ஸ் அம்சமானது இப்போது உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு கிடைக்கிறது. இனி பயனர்கள் ஒரு ரீல்ஸ்ல்  இருப்பது ஆடியோ டிராக்குகள் வரை சேர்க்கலாம் என கூறப்படுகிறது.