இந்தியாவில் DTH மாதிரியின் கீழ் டேட்டா இணைப்புகள் இல்லாமல் மொபைல் ஃபோன்களுக்கு டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பாக வழங்குவதற்கான சாத்திய கூறுகளை தற்போது மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. D2M என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் பயனர்கள் டேட்டா இணைப்பு எதுவும் இல்லாமல் மொபைல் ஃபோன்களில் டிவி பார்க்க முடியும். இந்த முயற்சியை பற்றி தொலைதொடர்பு துறை மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் ஆனால் வீடியோ நுகர்வு மூலம் தரவு வருவாய் இழப்பு பற்றிய கவலைகள் காரணமாக தொலைதொடர்பு ஆபரேட்டர்களின் எதிர்பார்ப்பை எதிர்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் சுமார் 220 மில்லியன் குடும்பங்கள் டிவி பார்த்து வரும் நிலையில் நாட்டில் சுமார் 800 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் உள்ளனர். எனவே தொலைபேசிகள் மூலம் அரசு உரையாடக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளதால் அவசர எச்சரிக்கை அமைப்புகள் உட்பட மக்களைச் சென்றடைவதற்கு இந்த வசதி நன்றாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.